ஒருநாள், ரி20 அணியின் தலைவராக திசர பெரேரா | தினகரன்

ஒருநாள், ரி20 அணியின் தலைவராக திசர பெரேரா

 

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி20 அணிகளுக்கான தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் அணித்தலைவராக இருந்த உபுல் தரங்கவிற்கு பதிலாகவே திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான உத்தியோபூர்வ அறிவிப்பை இலங்கை கிரிக்கட் வெளிட்டுள்ளது.

குறித்த பதவிக்கு, முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இலங்கை அணி கடந்த 11 மாதங்களில், 26 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றி அதில் 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதோடு, அதில் 12 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான தோல்வியை தழுவியுள்ளது.

சகல துறை ஆட்டக்காரரான திசர பெரேரா பாகிஸ்தானுடனான சுற்றுத்தொடரின் 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடருக்கு தலைமை தாங்கியிருந்தார்.

அந்த வகையில் இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் டிசம்பர்  10 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒரு நாள் தொடர் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள ரி20 தொடர் ஆகியவற்றுக்கு திசர பெரேரா தலைமை தாங்குவார்.

கடந்த 11 மாதங்களாக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, அதில் 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரை இலக்காக கொண்டு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வரும் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு போட்டிகள் நிறைவடைந்துள்ளதோடு, அதில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 


Add new comment

Or log in with...