படகு மூலம் நியூசிலாந்து செல்ல முயன்ற மூவர் கைது | தினகரன்

படகு மூலம் நியூசிலாந்து செல்ல முயன்ற மூவர் கைது

 

சட்டவிரோதமாக நியூசிலாந்துக்கு படகு மூலம் செல்லவதற்காக இருந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (29)அதிகாலை 2.45 மணியளவில் உடப்பு பொலிஸ் பிரிவுக்கட்பட்ட செல்வபுரம் கடற்கரையோரத்தில் நியூலாந்துக்கு படகு மூலம் செல்வதற்காக கடற்கரையோரத்தில் சிலர் நிற்பதாக உடப்பு பொலிஸாருக்கும் கடற்படையினருக்கும் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸாரும் மற்றும் கடற்படையினரும் இணைந்து உடப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மூன்று இளைஞர்களையும்  பொலிஸார் கைது செய்துள்ளதோடு, அவர்களால் கொண்டு வரப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மாரிமுத்து திவராசன் (21), சதாந்தன் சந்துரகாந்து (21), மலர் செல்வம் கஜீசன் (21) ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேலும் இவர்களுடன் நியூசிலாந்து செல்வதற்காக வருகை தந்த ஐந்து இளைஞர்கள் பொலிஸாரைக் கண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் அவர்ளையும் கைது செய்வதற்வதற்காக மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை இன்று புத்தளம் நீதிமனறத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(உடப்பு தினகரன் நிருபர் - கே. மகாதேவன்)

 


Add new comment

Or log in with...