தேர்தலை தாமதித்தால் வீதியில் இறங்குவோம் | தினகரன்

தேர்தலை தாமதித்தால் வீதியில் இறங்குவோம்

சூழ்ச்சிசெய்துவிட்டு முதுகெலும்பு இல்லாமல் ஒளிகின்றனர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டு காலம் தாழ்த்தினால் நாம் வீதியில் இறங்கி போராடுவோமென அநுர குமார திசாநாயக்க எம்.பி நேற்று(27) சபையில் தெரிவித்தார்.

பொதுவாக பிரச்சினைகளை பாராளுமன்றத்துக்குள்ளும் நீதிமன்றத்திலும் தீர்க்கலாம். ஆனால், திட்டமிட்டு தேர்தல் காலம் தாமதப்படுத்தப்படுவதை அரசியல் ரீதியாக போராடியே தீர்க்க வேண்டும் என்றும் அவர் நேற்று சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று(27) திங்கட்கிழமை வரவு செலவுத்திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, சமூக வலுவூட்டல் ,நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதம் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

 


Add new comment

Or log in with...