வர்த்தமானிக்கு எதிரான வழக்கை நவ. 30 இல் எடுக்குமாறு மோசன் | தினகரன்

வர்த்தமானிக்கு எதிரான வழக்கை நவ. 30 இல் எடுக்குமாறு மோசன்

 

உள்ளூராட்சி எல்லை தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நவம்பர் 30 இல் எடுத்துக்கொள்ளுமாறு சட்ட மா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் 06 பேரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி அறிவித்திருந்ததோடு, அது வரை அவ்வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை மிக விரைவாக நடாத்துவது தொடர்பில் கருத்திற்கொண்டு குறித்த வேண்டுகோளை சட்ட மா அதிபர் மோசன் ஒன்றின் மூலம் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிபிட்டிடிய, ஹாலிஎல ஆகிய மாகாண சபை எல்லைக்குட்பட்ட ஆறு பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 


Add new comment

Or log in with...