யோஷித்தவுக்கு 20 நாட்கள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி | தினகரன்

யோஷித்தவுக்கு 20 நாட்கள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

வழக்கு விசாரணைக்கு இடைநடுவே யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு சென்று வருவதற்கு கொழும்பு மேல் நீதி மன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

கார்ல்டன் விளையாட்டு வலையமைப்பில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் பணப்பரிமாற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது

மகன் யோசித்த ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்றம் யோசித்தவுக்கு 20 நாட்களுக்கு வெளிநாடு சென்று வருவதற்கு நேற்று அனுமதி வழங்கியது.

அவுஸ்திரேலியா செல்வதற்கு யோசித்தவுக்கு அனுமதி வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எ.எ.ஆர் ஹய்யன்துடுவ அவரது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறும் கடுவெல நீதவான் நீதிமன்றத்துக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

யோசித்த ராஜபக்ஷ தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குமாறு தனது சட்டத்தரணிக்கூடாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றத்தில் நேற்று யோசித்த சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க ஆஜராகினார். அவர் தனது தரப்பு வாதி கணுக்காலில் ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக டிசம்பர் 10 முதல் 31 வரையான காலப்பகுதிக்குள் அவுஸ்திரேலியா செல்ல வேண்டியிருப்பதாக நீதவானிடம் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...