தேசியக் கொடி விவகாரம்; வடக்கு முதல்வரிடம் விளக்கம் கோருகிறார் ஆளுநர் | தினகரன்

தேசியக் கொடி விவகாரம்; வடக்கு முதல்வரிடம் விளக்கம் கோருகிறார் ஆளுநர்

வடமாகாண கல்வி அமைச்சர் தேசியக் கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குறே விளக்கம் கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று (23) வடமாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் இந்த விளக்கத்தை ஆளுநர் கோரியுள்ளார் முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தம் முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்புக்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்பது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசியக் கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் விளக்கமளிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பான சில ஆவணங்களும் முதலமைச்சருக்கு ஆளுனரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.குறூப் நிருபர்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...