2018 இறுதியில் பலஸ்தீனத்தில் பொதுத் தேர்தல் | தினகரன்

2018 இறுதியில் பலஸ்தீனத்தில் பொதுத் தேர்தல்

பலஸ்தீனத்தில் 2018 முடிவில் பொதுத் தேர்தலை நடத்த போட்டி அமைப்புகளான பத்தா மற்றும் ஹமாஸ் உட்பட பலஸ்தீன தரப்புகளிடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

எகிப்தின் மத்தியஸ்தத்தில் ஹமாஸ் மற்றும் பத்தா அமைப்புகளுக்கு இடையில் கடந்த ஒக்டோபரில் சமரச ஒப்பந்தம் எட்டப்பட்டதோடு காசா நிர்வாகத்தை பலஸ்தீன அதிகார சபையிடம் கையளிக்க ஹமாஸ் இணங்கியது.

கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பலஸ்தீன தரப்புகள் பொதுத் தேர்தலுக்கான திகதியை தேர்வு செய்து ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் பரிந்துரைக்க இருப்பதாக குறிப்பிட்டது. மேற்குலக ஆதரவு பெற்ற பத்தா மேற்குக் கரையில் அதிகாரத்தில் இருப்பதோடு, காசாவில் ஹமாஸ் ஆட்சியில் உள்ளது.

கடைசியாக 2006 ஆம் ஆண்டு பலஸ்தீனத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பத்தா கட்சியை ஹமாஸ் தோற்கடித்தது. இதனை தொடர்ந்து இடம்பெற்ற மோதலை அடுத்தே காசாவை ஹமாஸ் கைப்பற்றியது. 


Add new comment

Or log in with...