சிரியா தொடர்பில் புடின் மற்றொரு அமைதி முயற்சி | தினகரன்

சிரியா தொடர்பில் புடின் மற்றொரு அமைதி முயற்சி

சிரியாவின் ஆறு ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி மாநாடு ஒன்றை நடத்தும் திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார். ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை சந்தித்த பின்னரே புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த மூன்று தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் சிரிய அரசு மற்றும் எதிர் தரப்புகளை இந்த மாநாட்டில் பங்கேற்க வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மாநாடு நடத்தப்படுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை. இது ரஷ்ய கருங்கடல் நகரான சொச்சியில் இடம்பெறவுள்ளது.

எனினும் அடுத்த வாரம் ஐ.நா மத்தியஸ்தத்தில் ஜெனிவாவில் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவிருப்பதோடு இதற்கான ஏற்பாடாக சிரிய அரச எதிர்ப்புக் குழுக்கள் சவூதி அரேபியாவில் கூடியுள்ளன. 


Add new comment

Or log in with...