ஐ.எஸ் மீது ஈராக் படை பாலைவனத்தில் தாக்குதல் | தினகரன்

ஐ.எஸ் மீது ஈராக் படை பாலைவனத்தில் தாக்குதல்

ஈராக்கின் சிரிய நாட்டு எல்லையை ஓட்டிய பாலைவன பகுதியில் இருந்து இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவை வெளியேற்றுவதற்கு ஈராக் படை நேற்று புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. மிக நீண்ட எல்லை பிராந்தியத்தில் ஒளிந்திருக்கும் ஐ.எஸ் குழுவுக்கு எதிரான தாக்குதல்களில் ஈராக் படைக்கு உதவியாக ஷியா போராட்டக் குழுவும் பங்கேற்றுள்ளது.

பலவீனம் அடைந்திருக்கும ஐ.எஸ் குழு தனது எதிர்கால தாக்குதல்களுக்கு இந்த பாலைவன பகுதியை தளமாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஈராக் இராணுவம் அறிவித்தது. இந்த பாலைவனத்தில் இருந்து ஐ.எஸ்ஸை துரத்திய பின்னரே அந்த குழுவுக்கு எதிரான வெற்றி பரகடனத்தை அறிவிப்பதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார்.

ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான ராவாவை ஈராக் படை கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றியது. 


Add new comment

Or log in with...