பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன்

பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(வைப்பக படம்)

 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர், பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் குணவர்தன தலைமையில் 13 பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்ட குறித்த பிரேரணை, இன்று (23) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளைய தினம் (24) மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலை, உரிய நேரத்தில் நடாத்துவதற்கு தவறியுள்ளதாக தெரிவித்து, அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் குற்றம் சுமத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தேர்தலை உரிய நேரத்திற்கு நடத்த தவறியமையால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவரது அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்தே குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...