ரஷ்யா சென்று புடினை சந்தித்தார் அல் அசாத் | தினகரன்

ரஷ்யா சென்று புடினை சந்தித்தார் அல் அசாத்

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் ரஷ்யா விஜயம் மேற்கொண்டு சொச்சி நகரில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடியை சந்தித்துள்ளார்.

இரு தலைவர்களும் கடந்த திங்கட்கிழமை இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அசாத், ரஷ்ய இராணுவ தளபதியையும் சந்தித்ததாக ரஷ்ய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவில் நீடிக்கும் ஆறு ஆண்டு சிவில் யுத்த காலத்தில் அசாத், ரஷ்யா சென்று புடினை சந்திப்பது இது இரண்டாவது தடவையாகும். சிரியாவில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த விரைவில் 2015 ஒக்டோபர் மாதம் அசாத் முன்னதாக ரஷ்யா சென்றிருந்தார்.

சிரிய போரில் ரஷ்யாவின் தலையீடு அசாத் அரசுக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு அது தொடக்கம் அந்த அரசு வெற்றிகளை பெற ஆரம்பித்தது. ஐ.நா ஆதரவு சிரிய அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க ஒரு வாரம் இருக்கும் நிலையிலேயே அசாதின் ரஷ்ய விஜயம் இடம்பெற்றுள்ளது. 


Add new comment

Or log in with...