உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை | தினகரன்

உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை

 

முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்துவந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

இன்று (21) காலை, முல்லேரியா பொலிஸ் நிலையத்தின் பரிசோதகர் தரத்திற்குரிய, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்குமிடத்தில், தனது சேவைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியின் மூலம் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த, பிரேமசிறி எனும் 57 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதோடு, தற்கொலைக்கான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...