Saturday, April 20, 2024
Home » பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய திட்டம்

பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய திட்டம்

by sachintha
October 31, 2023 9:00 am 0 comment

ஆறு மாத கால திட்டம் உள்ளதாக DIG தென்னக்கோன் தெரிவிப்பு

எதிர்வரும் 06 மாதங்களில் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி பாதாள உலகச் செயற்பாடுகளை முற்றாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கைதி ஒருவர் தெரிவித்தது போன்று மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என விசாரணையில் ஏற்கனவே தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “அண்மையில் அநுராதபுரத்தில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போது, ​​பஸ்ஸில் இருந்து ஒரு சிறிய காகித துண்டு வீசப்பட்டது. மீண்டும் கொழும்பைத் தாக்க நாங்கள் தயார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அவர் தன் மீதான கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு செய்துள்ளார். அதில் உண்மை இல்லை என தெரியவந்தது. இந்த பாதாள உலகக் குற்றச் செயல்கள் குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக தென் மாகாணத்திலும், மேல் மாகாணத்தில் சில இடங்களிலும் ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர்.

இல்லாவிட்டால் துப்பாக்கி ஏந்தியவர்கள் சுட்டுக் கொல்கின்றனர். இவை அனைத்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளால் வழிநடத்தப்படுகின்றன. இந்த ஆயுதக் குழுக்களையும் இந்த பாதாள உலக செயற்பாடுகளையும் எதிர்வரும் 06 மாதங்களில் முற்றாக நிறுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT