Thursday, March 28, 2024
Home » நாட்டின் உயிரிழப்போர் தொகையில் அதிகரிப்பு

நாட்டின் உயிரிழப்போர் தொகையில் அதிகரிப்பு

-பிறப்பு வீதம் குறைவடைந்து வருகிறது

by sachintha
October 31, 2023 6:57 am 0 comment

நாட்டின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்து வருவதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் திணைக்களம் மேற்கொண்டுள்ள கண்காணிப்பின் மூலம் இந்த நிலைமையை அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 2022 ஜூன் மாதத்தில் இருந்து இந்த வருடத்தின் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டில்
190,600 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டின் வருடந்த குடிசன அதிகரிப்பு 144,345 வரை குறைவடைந்துள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள மேற்படி திணைக்களம்;
2012 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2013ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாட்டில் பதிவாகியுள்ள மரணங்களில் எண்ணிக்கை 125,626 ஆகும். அந்த வகையில் கடந்த 2022 ஜூன் மாதம் முதல் இவ்வருடத்தின் ஜூன் மாதம் வரை நாட்டில் இடம் பெற்றுள்ள மரணங்களில் எண்ணிக்கை 190,600 ஆகும்.
அந்த வகையில் பிறப்புக்களின் எண்ணிக்கை குறைவடைந்து மரணங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே இந்தப் பதிவுகள் காட்டுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்படி மரணங்களின் அதிகரிப்புக்கான சரியான காரணத்தை இணங்கான முடியாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த திணைக்களம், கொவிட் சூழ்நிலைக்குப் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதேவேளை உலகளாவிய ரீதியில் இயல்பான வருடாந்த மரண எண்ணிக்கை நூற்றுக்கு 15 இல் இருந்து 100க்கு 45 வீதமாக அதிகரித்து காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வ நாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT