Thursday, April 18, 2024
Home » லாகூருக்கு வாரம் 04 விமான சேவைகள்

லாகூருக்கு வாரம் 04 விமான சேவைகள்

-ஸ்ரீலங்கன் இன்று முதல் ஆரம்பிக்கிறது

by sachintha
October 31, 2023 6:09 am 0 comment

இலங்கை விமான சேவை இன்று செவ்வாய்க்கிழமை (31) முதல் கொழும்புக்கும் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும் இடையில் வாராந்தம் நான்கு விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இவ் விமான சேவை இடம்பெறவுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் வாராந்தம் நான்கு விமான சேவைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை மேற்கொள்கிறது. இதன்மூலம் இந்திய துணைக் கண்டத்தில் பாகிஸ்தானின் இரண்டு பெரிய நகரங்களுக்கு இடையே நேரடி சேவைகளை வழங்கும் ஒரே ஒரு வெளிநாட்டு விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை விளங்குகிறது.பாகிஸ்தானில் உள்ள பயணிகளுக்கு அதிக வசதிகளை இலங்கை விமான சேவை வழங்குவதால், ஒவ்வொரு வாரமும் கொழும்பு மற்றும் லாகூர் இடையே பயணிக்கும் மொத்தம் 900 இருக்கைகளை கொண்ட விமானத்திற்கு 20 சதவீதம் கேள்வி அதிகரித்துள்ளது.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320, ஏ321 மற்றும் ஏ330 ஆகிய விமானங்கள் லாகூருக்கு பயணிக்கும். இலங்கையுடன் நீண்டகால இருதரப்பு உறவை பேணி வரும் பாகிஸ்தானுக்கு, இலங்கை விமான சேவை தனது சேவைகளை மேம்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற பயணத்தை மேற்கொள்ள நாங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவோம்.

லாகூரில் இருந்து பயணிக்கும் பயணிகள் கொழும்பிற்கு அப்பால் மாலைதீவு, தூர கிழக்கு நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் ஸ்ரீலங்கனின் விரிவான வலையமைப்பை பெறமுடியும் என இலங்கை விமானச் சேவையின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோகத் தலைவர் திமுத்து தென்னகோன் தெரிவித்தார். மேலும் தகவல் மற்றும் முன்பதிவுகளுக்கு www.srilankan.com ஐப் பார்வையிடலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT