பொதுமன்னிப்பு காலம் நிறைவு; நாளை இறுதி நாள் | தினகரன்

பொதுமன்னிப்பு காலம் நிறைவு; நாளை இறுதி நாள்

 

இது வரை 8,000 இற்கு மேற்பட்டோர் திரும்பினர்

விடுமுறை பெறாது, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் நாளையுடன் (22) நிறைவடைகின்றது.

அதன் அடிப்படையில், சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து விடுபடுவதற்கான கால எல்லை நாளையுடன் (22) நிறைவடைகின்றது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை இப்பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.

இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைககளுக்கு அமைய குறித்த பொதுமன்னிப்பு காலம் நவம்பர் 15 இலிருந்து நவம்பர் 22 வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டது.

இராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய கடந்த நவம்பர் 15 ஆம் திகதி வரை, 8,052 இராணுவ உறுப்பினர்கள் சரணடைந்துள்ளதோடு, இதில் 10 அதிகாரிகள், 8 கடேற் அதிகாரிகள் மற்றும் 8,034 ஏனைய தரத்திலுள்ளவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சமய தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ உறவினர்கள் தலையிட்டு, தாங்கள் அறிந்த இராணுவ உறுப்பினர்களிடம் இவ்வாய்ப்பை பயன்படுத்தி சட்ட ரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு அவர்களை தெளிவூட்டுமாறு இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


Add new comment

Or log in with...