உடரட்ட மெனிகே தடம்புரள்வு; மலையக ரயில் சேவை ஸ்தம்பிதம் | தினகரன்

உடரட்ட மெனிகே தடம்புரள்வு; மலையக ரயில் சேவை ஸ்தம்பிதம்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் ரயில் விலகியமை காரணமாக, மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதம், ஹட்டன் ரொசல்ல பகுதியில் 107 ஆம் கட்டை பகுதியில் இன்று (21) காலை தடம் விலகியது.

புகையிரதத்தின் இரண்டாவது பெட்டியின் சில்லு ஒன்றே தண்டவாளத்திலிருந்து பாய்ந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்

புகையிரத சேவை அதிகரிகளினால் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கொழும்பிலிருந்து ரொசல்லை வரையிலும் பதுளையிலிருந்து ஹட்டன் வரையில் ரயில் சேவை மட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திருத்தப்பணிகள் நிறைவடைந்ததும் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு. இராமச்சந்திரன்)

 


Add new comment

Or log in with...