விளக்கமறியலில் இருந்தவருக்கு தொலைபேசி கொடுத்தவருக்கு 6 மாத சிறை | தினகரன்

விளக்கமறியலில் இருந்தவருக்கு தொலைபேசி கொடுத்தவருக்கு 6 மாத சிறை

 

இரத்தினபுரி நீதிமன்றில் சம்பவம்

நீதிமன்ற விளக்கமறியல் கூண்டில் இருந்த சந்தேகநபர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குற்றச்சாட்டு ஒன்றின் காரணமாக நீதிமன்ற விளக்கமறியல் கூண்டில் வைக்கபப்பட்டிருந்த குற்றவாளியொருவருக்கு கையடக்க தொலைபேசியொன்றினை வழங்கிய ஒருவருக்கே இந்நிலைமை ஏற்பட்டது.

இக்காட்சியை கண்ணுற்ற அங்கு கடமையிலிருந்த சிறைக்காவலாளியால் குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது குற்றம் நிரூபணமானதை அடுத்து, இரத்தினபுரி நீதவான் சாலிய சன்ன அபேரத்ன சந்தேகநபருக்கு 06 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார்.

இரத்தினபுரி உள்வட்ட வீதியை சேர்ந்த அலுத் ஹேவகே பிரேமரத்ன என்பவரே இவ்வாறு சிறை சென்றவராவார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)

 


Add new comment

Or log in with...