பிரதமர் ரணில் பிணை முறி ஆணைக்குழுவில் | தினகரன்

பிரதமர் ரணில் பிணை முறி ஆணைக்குழுவில்

 

மத்திய வங்கியின் பிணை முறி தொடரபில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார்.

அவசியம் ஏற்படின் மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் இடம்பெற்ற மோசடிகளை ஆராயும் ஆணைக்குழுவிற்கு விளக்கமளிக்க தயார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் (20) பிரதமர் ரணில்விக்ரமசிங்கவை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவ்வாணைக்குழு வேண்டுகோள் விடுத்திருந்தமைக்கு அமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு ஆஜராகியுள்ளார்.

பிரதமருடன் பெருமளவான அமைச்சர்களும் குறித்த ஆணைக்குழுவிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அபகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில், ஆட்சியில் இருக்கும் நிலையில் பிரதமர் ஒருவர், விசாரணை ஆணைக்குழுவொன்றில் சாட்சியமளிப்பதற்காக சுயமாக முன்னிலையான சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...