தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் சு.க.விற்கு இல்லை | தினகரன்

தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் சு.க.விற்கு இல்லை

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் எந்த வழக்கையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தாக்கல் செய்யவில்லையென அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய கட்சி என்ற அடிப்படையில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான தேவை தமக்கு இல்லையென்றும் கூறினார்.

வரவுசெவுத்திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் இன்று (17) பாராளுமன்றத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திவைக்கும் சதி முயற்சிகளில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஈடுபட்டிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவ்வாறானதொரு தேவையொன்றும் சு.கவுக்கு இல்லை என அமைச்சர் பதிலளித்திருந்தார்.

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு சு.க எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்யவிருப்பதாகவும் கூறினார்.

- RSM

 


Add new comment

Or log in with...