மக்களுக்கு ஓரளவு நிம்மதி தரும் வரவு-செலவுத் திட்டம் | தினகரன்

மக்களுக்கு ஓரளவு நிம்மதி தரும் வரவு-செலவுத் திட்டம்

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவு திட்டத்தின் பிரதிபலன்கள் பற்றி மக்களின் கருத்துக்களை இங்கு பகிர்கின்றோம்.

எஸ். பிரேம் ராஜ்குமார் (முன்னாள் தலைவர், கண்டி தமிழ் வர்த்தக சங்கம் )

சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமானது பெரும் நன்மையைப் பயப்பிக்கா விட்டாலும் ஓரளவுக்கு மக்கள் நிம்மதியடைந்திருக்கின்றார்கள். மலையக மக்களுக்கு 25000 வீடுகள் நிர்மாணி த்துக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மலையக மக்கள் பெரும் நன்மையை அடையவுள்ளனர். நுவரெலியா மாவட்டத்திற்கு மட்டும் இல்லாமல் கண்டி, மாத்தளை ஏனைய மலையகப் பகுதிகளிலும் இந்த வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் கல்வி வளர்ச்சிக்குச் செய்த மிகப் பெரும் பங்கானது மாணவர்களுக்கு வழங்கிய காப்புறுதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் மாணவாகளின் வளர்ச்சியில் பெரும் பங்கை இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தது பெரும் கஸ்டத்துடன் வாழும் மலையக மக்கள் பெரும் பயனடைவார்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் மேலும் சிறப்பாக அமையும் என்பதே எமது திண்ணம்.

எஸ். தனராஜ் (உப செயலாளர்

கண்டி தமிழ் வர்த்தக சங்கம் )

சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மலையக மக்களுக்கு ஒரு வரப்பிரகாசமாக அமைந் துள்ளது. இது நாட்டின் எதிர்காலத்தை நோக்கிய வரவு செலவு திட்டமாக அமைகிறது இலங்கையின் முதுகெலும்பாக இருக்கக் கூடிய மலையக மக்களுக்கு பல்வேறு வகையிலும் பயனளிக்கக் கூடியதாக உள்ளன. 25,000 வீடுகள் கட்டிக் கொடுக்கின்ற விடயம் வரவேற்கத் தக்கதாக அமைந்து ள்ளது. மலையக மக்கள் லயன் காம்பராக்களில் வாழ்ந்து வாழ்ந்து நொந்து போன மக்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். அது மட்டுமல்ல, அவர்களுடைய அத்தியாவசியப் பொருட்கள் சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு இரண்டு மடங்கு நன்மையை கொடுக்கின்ற விடயமாகும். நாங்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் மிக்க சந்தோசம் அடைகின்றோம்.

மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு விலை குறைப்பு என்பது சந்தோசமான செய்தி. இது வந்து சூழல் மாசு அடைவதைத் தவிர்த்து எதிர்காலத்தில் பசுமை மிக்க சுகாதாரத்துடன் இருக்கின்ற சூழலை உருவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டத்தை வழங்கியிருப்பது என்பது எல்லாவற்றையும் விட மலையக மாணவர்களுக்கும் பெரும் நன்மையை அளிக்கும்.

அத்துடன் மலையகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற கள்ளச்சாராயம் தரம் குறைந்த மது பாவனை மலையகத்தில் எங்கும் இருக்கிறது. இதனைத் தடுப்பதற்காக சாராய விலைகளுடைய வரியை அரசாங்கம் குறைத்துள்ளது. இது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.

எம். எஸ். எம். ஜிப்ரி;

(அரசியல் விஞ்ஞானத் துறை

ஆசிரியர் அக்குரணை )

இலங்கை அரசியல் வரலாற்றிலும் பொருளதார விடயங்களிலும் ஒரு சிறந்த வரவு செலவு திட்டம் எனக் கருதுகிறேன். இந்த வரவு, செலவு திட்டப் பொறுத்த வரையிலும் விசேடமான அம்சம் என்ன வென்றால் பெரும்பாலும் வரவு செலவு திட்டம் வாசிகப்பட்ட பின்னர்தான் விலைகள் குறைக் கப்பது சம்மந்தமான விடயங்கள் பின்னர்தான் என்று அறிவிக்கப்படும். ஆனால் இந்தவரவு செலவு திட்டம் வாசிக்கப்படும் முன்னரே அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைப் பட்டியல் பத்திரிகைளில் வெளியாகி விட்டது என்பதை நான் ஆதாரதப்படுத்த முடியும். இந்த ஆதாரத்தை மைய மாகக் கொண்டே ஒரு சிறந்த பொருளாதாரத்தை ஒரு சிறந்த நல்லாட்சியை கட்டி எழுப்பு வதற் கான ஒரு வாய்ப்பை இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுத்துள்ள எமது நாட்டு மக்களுக்கு ஆகும்.

இது மக்களைப் பொறுத் தவரையில் அதிலும் வசதி படைத்தவர்களை விட அதிகளவில் வாழும் வசதியின்றி அடி மட்டத்தில் வாழும் மக்களுக்கு பொருளாதார நிம்ம தியை ஒரு பொருளாதார சிக்கலுக்கான ஒரு தீர்வையும் வழங்கியிருக்கிறது என்பதை சந்தேகம் இல்லாமல் ஆணித்தரமாகக் கூற முடியும்.

அவை மட்டுமல்ல இந்த வரவு செலவு திட்டத்தில் எம்மால் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் நாட்டு மக்களின் பொருளாதார நலன்கள் விருத்தி செய்யப்பட வேண்டும் என்பது தான் இதில் காட்டப்பட்டுள்ளதே ஒழிய தமது கட்சி அரசியல் தமது எதிர்கால அரசியல் வரவு செலவு திட்டம் இது அமையவில்லை எனவே, முன்னைய அரசாங்கங்கள் வாக்குகளுக்காகத்தான் வரவு செலவு திட்டம் தயாரித்தது. ஆனால் இந்த அரசாங்கம் பொது மக்களின் பொருளாதார விருத்திற்கே பஜட்டை தயாரித்துள்ளது என்று இங்கு என்னால் கூற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஐ. ஐனூடீன் ( தனியார் கல்லூரி

இயக்குனர் அக்குரணை )

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் பொது மக்களுக்கு மிகவும் உகந்த நல்ல சேவையை வழங்கி இருக்கின்றது என்பதுதான் என்னுடைய கருத்து. ஏனென்றால் மின் சக்தியில் ஓடும் கார்கள் குறைக்கப் பட்டுள்ளன. எரிபொருள்கள் குறைக்கப்பட்டுள்ளன. சாதாரண மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு வரப்பிரகாசமாகவே இந்த வரவு செலவு திட்டம் அமையப் போகின்றது. பொதுவாக ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு போக்குவரத்து இன்றியமையாதது ஒன்றாகும். அந்தவகையில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் எரிபொருட்களுடைய விலையை தக்க வைத்துள்ளது. என்பதைப் பார்க்கின்றபோது இந்த நாடு முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கின்றது என்றுதான் கூற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அவை மட்டுமல்ல அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது இந்த முயற்சி பாராட்டக்குரியதாகும்.

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நிதி அதிகரிப்பு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகுறைப்பு, வாகனங்கள் விலை குறைப்பு உள்ளிட்ட அனைத்து வகையிலான திட்டங்களும் ஒரு உன்னதமான எழுச்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறலாம் என அவர் தெரிவித்தார்.

சனூன் ( புவியல் விஞ்ஞானத்துறை ஆசிரியர் குருநாகல் பானகமுவ)

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உண்மையிலேயே வரவேற்கக் கூடியதாக இருக்கின்றது. இது பொது மக்களுக்கு ஒரு சிறப்பான வரவு செலவுத் திட்டமாக நான் கருதுகின்றேன். இந்த வரவு செலவுத் திட்டத்தை சென்ற ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது நல்லதொரு வளாச்சி நிலை இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். அத்துடன் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது உண்மையிலேயே பாரிய வரவு செலவு திட்டமாக நாங்கள் கருதுகின்றோம்.

மத்திய தர வர்க்கத்தினரும் சாதாரண பொது மக்களும் நன்மையடைவுள்ளனர். இந்த வரவு செலவுத் திட்டமானது மக்களுடைய வாழ்க்கை சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. 2020 ஆம் ஆண்டாகும் போது இந்த வரவு செலவுத் திட்டம் மேலும் மேலும் வளர்ச்சியடைவுள்ளது. எங்களைப் பொறுத்தரையிலும் ஒரு சந்தோசமான செய்தியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இக்பால் அலி
மாவத்தகம தினகரன் நிருபர்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...