தினகரனை அதிர்ச்சியடைய வைத்த நீதிமன்ற தீர்ப்பு! | தினகரன்

தினகரனை அதிர்ச்சியடைய வைத்த நீதிமன்ற தீர்ப்பு!

டி.டி.வி. தினகரனை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தினகரனின் தங்கை சீதளாதேவிக்கும், அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கரனுக்கும் சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையையும் அபராத தொகையையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பல மாதங்களாக கிடப்பில் இருந்த இவ்வழக்கை தீடீரென கையிலெடுக்கப்பட்டதில் அதிர்ந்து போயுள்ளது சசிகலா குடும்பம்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, " சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக கிடப்பில் இருக்கும் வழக்குகளின் தன்மை குறித்து சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறையிடம் மத்திய உள்துறை ஆய்வு செய்துள்ளது. அதில் என்னென்ன வழக்குகள் போடப்பட்டன? ஒவ்வொரு வழக்கின் தன்மை என்ன? எத்தனை வழக்குகள் மேல் முறையீட்டில் இருக்கின்றன? என்பது குறித்தெல்லாம் அலசி அது குறித்து ஒரு அறிக்கை தயார் செய்து மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் மேல் முறையீடு செய்யப்பட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்காக ரிசர்வ் வங்கி பாஸ்கரனுக்கு எதிரான வழக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதனையடுத்து டெல்லியிலிருந்து சென்னைக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதற்கேற்ப இவ்வழக்கை கையில் எடுத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது " என தமிழக உள்துறை அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கிறது!

இந்த நிலையில் தனக்கு எதிரான அந்நியசெலவாணி மோசடி வழக்கிலும் இதே போல தீர்ப்பு வருமோ என கவலையில் இருக்கிறாராம் தினகரன். 


Add new comment

Or log in with...