நைஜீரியாவில் 4 தற்கொலை தாக்குதல்கள்: 10 பேர் பலி | தினகரன்

நைஜீரியாவில் 4 தற்கொலை தாக்குதல்கள்: 10 பேர் பலி

 

நைஜீரியாவின் மைடுகுரி நகரில் நால்வர் நடத்திய தற்கொலை தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட தாக்குதல்தாரிகள் முனா மாவட்டத்தில் குண்டை வெடிக்கச் செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்காதபோதும் இஸ்லாமியவாத ஆயுதக் குழுவான பொகோ ஹராம் மடுகுரியில் பல தற்கொலை தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

இங்கு அடிக்கடி பெண் தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் மாலை நேர தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே முதல் தாக்குதல் இடம்பெற்றிருப்பதோடு அதில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடொன்றுக்குள் மற்றொடு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு மேலும் இருவர் தமது இலக்கை எட்டுப் முன்னர் குண்டை வெடிக்கச் செய்துகொண்டுள்ளனர்.

இஸ்லாமிய அரசொன்றை அமைக்கவெனக் கூறி பொகோ ஹராம் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.


Add new comment

Or log in with...