திடீர் வெள்ளத்தால் கிரீஸில் 15 பேர் பலி | தினகரன்

திடீர் வெள்ளத்தால் கிரீஸில் 15 பேர் பலி

மத்திய கிரீஸில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் ஏதன்சின் மேற்காக அமைந்திருக்கும் தொழிற்துறை நகரங்களான மன்ட்ரா, நீ பெரமோஸ் மற்றும் மெகரா அதிகம் பாதிப்படைந்துள்ளன.

இதில் வயது முதிர்ந்தவர்களே அதிகம் உயிரழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் வீடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. வேகமாக அடித்துவரப்பட்ட வெள்ளத்தில் வீதிகள் சேற்றில் முழ்கியுள்ளன. காயமடைந்த 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு சிலரை தொடர்ந்தும் காணவில்லை. இரவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தை எதிர்பார்க்கவில்லை என்று பாதிக்கப்பட்ட நகரங்களை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் வீடுகள், வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. 


Add new comment

Or log in with...