Friday, March 29, 2024
Home » பாராளுமன்றம் செல்வதற்காக தமிழர்களை தூண்டும் செயலில் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகள்!

பாராளுமன்றம் செல்வதற்காக தமிழர்களை தூண்டும் செயலில் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகள்!

-ஜனநாயகம் மீது நம்பிக்ைக கொண்டோரை தம்முடன் இணையுமாறு கோரிக்ைக

by sachintha
October 31, 2023 6:16 am 0 comment

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் பகிரங்க மடல்!

தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் மக்களின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். பாராளுமன்றம் செல்வதற்கு இலகுவான வழியாக மக்களைத் தூண்டும் உரைகளை ஆற்றி வருகின்றனர் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள பகிரங்க மடலில் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காகச் சிந்திப்பவர்களும், ஜனநாயகம் மீது நம்பிக்ைக கொண்டவர்களும் எம்மோடு இணைய வேண்டுமெனக் கோருகின்றேன்’ எனவும் ஆனந்தசங்கரி தனது மடலில் கேட்டுள்ளார்.

ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சர்வதேச மதத்தலைவர்களே, கல்விமான்களே, புத்திஜீவிகளே, ஜனநாயகம் மீது முழுமையான நம்பிக்ைக கொண்ட அரசியல்வாதிகளே!

நான் நூறு வருடங்களை எட்டுவதற்கு இன்னும் பத்து வருடங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், என்னுடைய வயது, அரசியல் அனுபவம், தார்மீக சிந்தனை, ஜனநாயகப் பண்புகளின் பேரில் இந்த மடலை என்னுடைய தாய்நாட்டின் சார்பாகவும் என் இனத்தின் சார்பாகவும் சமர்ப்பிக்கின்றேன். இதனை நான் சமர்ப்பிப்பது எனது இனத்திற்காக மாத்திரமல்ல, சர்வதேசம் ஒரு நியாயமான புரிதலுடன் எமது நாட்டில் நிலவுகின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற பேரவாவினால் ஆகும்.

அமரர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜீ.ஜி. பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு அமரர்கள் சிவசிதம்பம், அ. அமிர்தலிங்கம் ஆகியோரால் இலங்கையின் ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்த இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஆகவே என்னுடைய காலத்தில் இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைப்பது காலத்தின் கட்டாயமும் எனது இறுதிக்கால ஆசையுமாகும்.

இந்திய மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசிப்பதும் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக் கடற்பிரதேசத்தில் பிரவேசிப்பதும் நீண்டகாலப் பிரச்சினையாக இருப்பதோடு இருதரப்பு மீனவர்களும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்குத் தீர்வாக இலங்கை,- இந்திய அரசுகள் ஒன்றிணைந்து தத்தமது எல்லைகளை வரையறுக்க வேண்டும். இப்பிரச்சினையை கடற்றொழிலை நம்பி வாழும் இரு நாட்டு மீனவர்களது மனிதாபிமான பிரச்சினையாக நோக்கி கடல் எல்லை வகுக்கப்பட்டு அடையாளமிடப்படல் வேண்டும். அதேபோல் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பு எல்லையைத் தாண்டாமலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பு எல்லையைத் தாண்டாமலும் இருப்பதற்கான நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதற்கு இலகுவான வழியாக மக்களைத் தூண்டும் உரைகளை மட்டுமே சாதகமாக வைத்து செயற்படுகின்றார்கள். அதேபோல் தங்கள் பாராளுமன்ற உரைகளைப் போலவே தம்மை தெரிவுசெய்த தமிழ் மக்களிடம் நேர்மையாக செயற்படுகிறார்களா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழ் மக்களின் பலவீனத்தை தமக்கு சாதகமாக தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

காலம் கடந்தாவது தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறு சர்வதேசத்திற்கு ஞாபகமூட்டுகின்றேன். கடந்த காலங்களில் எனது அறுபது வருடங்களுக்கு மேலான ஜனநாயக ரீதியான அரசியலில் எமது நாட்டில் நிரந்தரமான சமாதானத்தைக் கொண்டுவர எடுத்த முயற்சிகளுக்கு தமிழ் தேசியம் கதைத்த சந்தர்ப்பவாதிகளும் வெகுசன தொடர்பு சாதனங்களும் ஒத்துழைக்கவில்லை. அதேபோல் 2004 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தேடி வந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம் என்பதனை மனத்தாக்கங்களுடன் சர்வதேசத்திற்கு கூறிவைக்க விரும்புகிறேன்.

2004ஆம் ஆண்டில் எமது தமிழ் அரசியல்வாதிகளால் சிதைக்கப்பட்ட ஒற்றுமையின்மையின் காரணமாக 2009 ஆம் ஆண்டு துன்பகரமான மக்கள் பேரழிவு ஏற்பட்டது. என்னுடைய கொள்கையை ஏற்று 2004 ஆம் ஆண்டு எங்களுடைய சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தின் கீழ் செயற்பட்டிருந்தால் புலிகள் இராணுவ நடவடிக்ைககளை கைவிட்டிருப்பார்கள். ஒரு சமாதானத்தீர்வு வந்திருக்கும்.

இந்த சந்தர்ப்பத்திலாவது உணர்ச்சிவசப்பட்டு பொய் அறிக்ைககள், ஹர்த்தால்கள், நியாயமற்ற முறையில் விடுவதை தவிர்த்து யதார்த்தபூர்வமாக சிந்தித்து தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு இந்திய அரசியல் முறையைப் பின்பற்றி தீர்வுக்கு நாம் முயற்சிக்க வேண்டும். இந்தியாவும் இதற்கு உதவ வேண்டும். தமிழ் அரசியல் தரப்புக்கள் நான் கூறியதைக் கேட்காமல் நடந்ததன் விளைவினால் தமிழ் ஜனநாயக அரசியல்வாதிகள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.

ஒற்றுமையாக மக்கள் வாழ்ந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான முறுகல் ஏற்பட்டு, இறுதியாக யுத்தமாக மாறி இரத்தமாக ஓடிவிட்டது. சகிப்புத்தன்மையையும், அஹிம்சையையும் நான் என்னுடைய அரசியலிலும் சொந்த வாழ்வியலிலும் முன்னெடுத்ததாலேயே எனக்கு யுனெஸ்கோ விருது கிடைத்தது என்று ஆத்மார்த்த ரீதியில் கூறுகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில் காலத்தில் நிலையறிந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்ைக கொண்டவர்களும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக சிந்திப்பவர்களும் எம்மோடு இணையுமாறு கோரிக்ைக விடுக்கின்றேன். இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் தமிழர்களின் ஜனநாயக பாரம்பரிய விடுதலைக்கும் உதவுமாறு கேட்கின்றேன்.

இவ்வாறு ஆனந்தசங்கரி தனது பகிரங்க மடலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT