பயங்கரவாத தாக்குதல்; உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆவது ஆண்டாக வீழ்ச்சி | தினகரன்

பயங்கரவாத தாக்குதல்; உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆவது ஆண்டாக வீழ்ச்சி

அனைத்துலக அளவில், தீவிரவாதத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தொடந்து இரண்டாவது ஆண்டாகச் சென்ற ஆண்டு குறைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட பொருளாதார, அமைதி நிலையம் வெளியிட்ட உலகளாவிய தீவிரவாதக் குறியீட்டு அறிக்கை அதனைத் தெரிவித்தது.

பயங்கரவாதத் தாக்குதல்களால் சென்ற ஆண்டு முழுமைக்கும், 25,673 பேர் மாண்டனர். பயங்கரவாதத்தின் பாதிப்பு உச்சத்தில் இருந்த 2014ஆம் ஆண்டு நிலவரத்தோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 22 வீதம் குறைவாகும். சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், பயங்கரவாதத் தாக்குதலால் நேர்ந்த மரணங்கள் சென்ற ஆண்டு கணிசமாகக் குறைந்தன. பயங்கரவாத எதிர்ப்பைப் பொறுத்தவரை ஆக அதிக முன்னேற்றம் கண்ட நாடு நைஜீரியா இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

போக்கோ ஹராம் பயங்கரவாதக் குழுவின் தாக்குதலால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 80 வீதம் குறைவடைந்துள்ளது. 


Add new comment

Or log in with...