சுயதொழில் பெறுவதற்காக சென்ற மனைவி மீது கணவன் தாக்குதல் | தினகரன்

சுயதொழில் பெறுவதற்காக சென்ற மனைவி மீது கணவன் தாக்குதல்

 

வவுனியாவில்  கண்டி வீதியிலுள்ள சுயதொழில் வழங்கும் நிறுவனத்திற்குச் சென்ற குடும்பத் தலைவி ஒருவர் மீது அவரது கணவன் சுயதொழில் பெறும் அலுவலகத்திற்குள் வைத்துத் தாக்கியுள்ளதாக சுயதொழில் வழங்கும் நிறுவனத்தின முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (16) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கண்டி வீதியில் இயங்கிவரும் சுயதொழில் நிறுவனம் ஒன்றிற்கு உதவி பெறுவதற்காக மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள குடும்பப் பெண் ஒருவர் சென்று தனது சுயதொழில் திட்டத்திற்கு உதவி செய்யுமாறு தெரிவித்து 10 வீதமான பணத்தினை வைப்புச் செய்துள்ளார்.
இதையடுத்து காலை அந்நிறுவனத்திற்குச் சென்ற குறித்த குடும்பத்தலைவியின் கணவர் சுயதொழில் அலுவலகத்திற்குள் வைத்து தனது அனுமதியின்றி சுயதொழில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவித்து மனைவியை தாக்கியுள்ளார்.

இதைத் தடுத்து நிறுத்தச் சென்ற சுயதொழில் அலுவலகர்கள் மீதும் தாக்க முற்பட்டுள்ளார்.

இதையடுத்து மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதோடு, தமது அலுவலகத்திற்குள் வந்து அங்கு பணிபுரியும் அலுவலகர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள முயற்சித்துள்ளதாக தெரிவித்து சுயதொழில் அலவலகத்தினரும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாக சுயதொழில் நிறுவனத்தின் முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

 


Add new comment

Or log in with...