இந்திய மீனவர்கள் 10 பேர் கைது; நவ. 30 வரை விளக்கமறியல் | தினகரன்

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது; நவ. 30 வரை விளக்கமறியல்

 

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பத்து இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் நாகப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த பத்து தமிழக மீனவர் யாழ் பருத்தித்துறைக்கு வடக்கே 13 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டனர்

அத்துடன் அவர்களின் இரண்டு இழுவைப்படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

குறித்த மீனவர்கள் இன்று (16) யாழ் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவேளை அவர்களை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

(யாழ்ப்பாணம் குறூப்  நிருபர் - சுமித்தி தங்கராசா)
 


Add new comment

Or log in with...