உடப்பில் ஐயப்பசுவாமி மாலை அணிதல் நிகழ்வு | தினகரன்

உடப்பில் ஐயப்பசுவாமி மாலை அணிதல் நிகழ்வு

இந்தியாவிலுள்ள சபரிமலை ஐயப்பசுவாமி ஆலய தரிசனத்தை முன்னிட்டு மாலை அணிதல் நிகழ்வு இன்று (17) காலை உடப்பு வம்பிவட்டான் கிராமத்திலுள்ள ஐயப்பசுவாமி ஆலயத்தில் குருசாமி சின்னையாதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மாலை அணிதல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாலை அணிதல் நடைபெற்ற தினத்திலிருந்து நாற்பது நாட்கள் இவர்கள் சைவ உணவில் விரதமிருப்பது கட்டாயமாகும். அத்தோடு கருநிற வேஷ்டியும் கருநிற சட்டையும் அணிய வேண்டும். அதன் பின்னர் சபரிமலைக்குச் சென்று ஐயப்ப சுவாமி தரிசனத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.

(உடப்பு தினகரன் நிருபர் - கே. மகாதேவன்)

 


Add new comment

Or log in with...