வீடொன்றில் யுவதி ஒருவருடன் இருந்த ஏழு இளைஞர்களுக்கு விளக்கமறியல் | தினகரன்

வீடொன்றில் யுவதி ஒருவருடன் இருந்த ஏழு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

 

- ஏழ்வரும் உயர்தரம் கற்கும் மாணவர்கள்

- சிகரட், கஞ்சா, ஆணுறை மீட்பு

மட்டக்களப்பிலுள்ள வீடொன்றில் யுவதி ஒருவருடன் இருந்து கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த யுவதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு பாரதி லேன், இரண்டாம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து 27 வயதுடைய யுவதி ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் மட்டக்களப்பு பொலிசார் நேற்று (13) திங்கட்கிழமை கைது செய்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர், இன்று (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த இளைஞர்கள் ஏழு பேரையும் எதிர்  வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் குறித்த யுவதியை ஒரு  இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் விடுதலை செய்தார்.

எனினும் குறித்த யுவதிக்கு பிணை நிற்க எவரும் முன்வராததால் அவர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து  செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது.

குறித்த வீட்டிலிருந்து கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பவர்கள் எனவும் இவர்கள் கைது செய்யப்பட்ட போது அந்த வீட்டிலிருந்து கஞ்சா மற்றும் ஆணுறை, சிகரட் என்பனவும் மீட்கப்பட்டதாகவும் இவர்கள் முறையற்ற விதத்தில் நடந்து  கொண்டதாக கிடைத்த தகவலின்  அடிப்படையிலேயே இவர்களை பொலிசார் கைது செய்ததாகவும் தெரிய வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார்  தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...