சிறையில் சசிகலாவுக்கு ஐந்து பிரத்தியேக அறைகள் | தினகரன்

சிறையில் சசிகலாவுக்கு ஐந்து பிரத்தியேக அறைகள்

 

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதியாக உள்ள சசிகலாவிற்கு வி.ஐ.பி. சலுகை வழங்கியது உண்மைதான் என வினய் குமாரின் 300பக்க அறிக்கையில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் சிறைச்சாலை முறைகேடு குறித்து விசாரணை நடத்திய வினய்குமாரின் 300 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சம் குறித்த தகவல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வெளியான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள், தண்டனைக் கைதியான சசிகலாவிற்கு இதுவரை வழங்காத வி.ஐ.பி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது சசிகலா உறங்குவதற்கு, சாப்பிடுவதற்கு, பூஜை செய்வதற்கு, யோகாசனம் செய்வதற்கு என 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதில் சசிகலாவைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இளவரசி மட்டும் சென்று வந்தார். மேலும் சசிகலாவிற்கு வழங்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை துணிகளால் மறைத்து வைத்திருந்துள்ளனர். பிரத்தியேக மருத்துவம், சமைப்பதற்கு பெண் கைதிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள், உறங்குவதற்கு மெத்தை, பொழுதுபோக்கிற்கு ரி.வி உள்பட பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Add new comment

Or log in with...