சிரிய சந்தையில் வான் தாக்குதல்: 53 பேர் பலி | தினகரன்

சிரிய சந்தையில் வான் தாக்குதல்: 53 பேர் பலி

வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சந்தை ஒன்று தாக்கப்பட்டது தொடர்பில் காண்பிக்கும் சமூகதளத்தில் வெளியான வீடியோவில் அங்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீதிகள் எங்கும் இடிபாடுகளையும் மக்கள் காயமடைந்தவர்களை தூக்கியபடி ஓடுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

இங்கு வெவ்வேறு மூன்று தாக்குதல்கள் இடம்பெற்றதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் அறிவித்த மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள அலெப்போ மாகாணத்தின் சிறு நகர் ஒன்றே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்த மோதல் தவிர்ப்பு வலயங்களில் வன்முறைகள் குறைந்தபோதும் சிறு சிறு மோதல்கள் தொடர்கின்றன. அரச எதிர்ப்பாளர்கள் மற்றும் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபட்ட ஜிஹாத் குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் இருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வான் தாக்குதலில் 100க்கும் அதிகமான கடைகளை கொண்ட ஒட்டுமொத்த சந்தையும் அழிக்கப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் விபரித்துள்ளனர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...