Friday, March 29, 2024
Home » உலக வங்கி பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் யாழ் விஜயம்

உலக வங்கி பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் யாழ் விஜயம்

by Prashahini
October 30, 2023 1:57 pm 0 comment

இலங்கைக்கான உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் (செயலாற்று) அன்னா பிஜியர்ட் (Anna Bjierde) தலைமையிலான குழுவினர் இன்று (30) கோபாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் சுமார் 50 இற்கும் மேற்பட்ட பிரதேச வைத்தியசாலைகளின் தொழில்நுட்ப கூடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டது.

அவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டதில் கோபாய் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை பார்வையிடும் முகமாக குறித்த குழுவினர் இன்று வருகை தந்தனர்.

வருகை தந்தவர்களுக்கு கோப்பாய் வைத்தியசாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் உயர் மட்ட கலந்துரையாடலும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்து சேன, வடமாகாண பதில் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், கோபாய் பிரதேச வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பு அதிகாரி வைத்தியர் மகேந்திரன், கோப்பாய் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் சிவா கோனேசன், ஜப்பான் ஜெயிக்கா நிறுவன அதிகாரிகள், உலக வங்கியின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் (செயலாற்று) அன்னா பிஜியர்ட் (Anna Bjierde) நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம்
யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT