லிபிய கொள்கலன்களில் 700 ஐ.எஸ் சடலங்கள் | தினகரன்

லிபிய கொள்கலன்களில் 700 ஐ.எஸ் சடலங்கள்

லிபியாவின் மிஸ்ரட்டா நகரில் என்ன செய்வது என்ற இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் ஐ.எஸ் குழு உறுப்பினர்களின் நூற்றுக்கணக்கான சடலங்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்களை பாதுகாப்பதற்கு தற்பவெப்பநிலை -18 மற்றும் -20 இல் வைக்கப்பட வேண்டியிருப்பதாக மிஸ்ரட்டா நகர குற்ற தடுப்பு பாதுகாப்பு அதிகாரியான அலி துவைலப் குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவின் துறைமுக நகரான சிர்த்தில் இருந்து 2016 டிசம்பரில் ஐ.எஸ் குழுவினர் வெளியேற்றப்பட்டது தொடக்கம் மேம்படுத்தப்பட்ட பிணவறையில் சுமார் 700 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வரிசையான கொள்கலன்களைக் கொண்ட பிணவறைக்கு முன்னால் தடயவியல் மருத்துவர்களால் சிறு ஆய்வு கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சடலங்களின் மரபணு சோதனை மற்றும் புகைப்படங்கள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன.

போதிய வளங்கள் இல்லாததால் மேலும் பல நூறு ஐ.எஸ் சடலங்கள் சிர்த் நகர இடிபாடுகளில் கைவிடப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...