சீனியர் புஷ் மீது 6 பெண்கள் புகார் | தினகரன்

சீனியர் புஷ் மீது 6 பெண்கள் புகார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் மீது ஆறாவதாக இளம்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சீனியர் புஷ் என அழைக்கப்படும் 79 வயது அவரால் நடக்க முடியவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்து தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் மீது 5 பெண்கள் பாலியல் புகார் கூறினர். இவர் ஜனாதிபதியாக பதவி வகித்த போதும், ‘சி.ஐ.ஏ’ உளவு நிறுவன இயக்கனராக இருந்தபோதும் தங்களிடம் பாலியல் சில்மி‌ஷம் செய்ததாக குற்றம் சாட்டினர்.

இதை சீனியர் புஷ் தனது செய்தி தொடர்பாளர் மூலம் மறுத்துவிட்டார். இந்த நிலையில் தற்போது அவர்மீது 6ஆவது பெண் ஒருவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ரோஸ்லின் காரிகன் என்ற அந்த பெண் தனது 16 வயதில் புஷ்ஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது அவர் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

Or log in with...