சிம்பாப்வே இராணுவ தளபதி ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை | தினகரன்

சிம்பாப்வே இராணுவ தளபதி ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை

சிம்பாப்வேயின் ஆளும் கட்சி களையெடுப்பு நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், இராணுவம் நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்று அந்நாட்டு இராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரொபட் முகாபே நாட்டின் துணை ஜனாதிபதி எம்மர்சன் நன்கக்வாவை பதவி நீக்கி ஒரு வாரத்திலேயே இராணுவத்தின் இந்த அரிதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 90 சிரேஷ்ட அதிகாரிகளுடன் செய்தியாளர் மாநாடொன்றில் தோன்றிய இராணுவ தளபதி ஜெனரல் கொன்ஸ்டான்டினோ சிவென்கா, தனது எச்சரிக்கையில் எவரையும் குறிப்பிட்டு கூறவில்லை.

முகாபேவுக்கு அடுத்த தலைவராக கருதப்பட்டு வந்த நன்கக்வா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது நாட்டின் அடுத்த தலைவராக பார்க்கப்படும் முகாபேவின் மனைவி கிரேஸ், நன்கக்வாவை ‘தலையில் அடித்துக் கொல்ல வேண்டிய பாம்பு’ என்று விபரித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவ தலைமையகத்தில் உரையாற்றிய ஜெனரல் சிவென்கா, ‘நன்கக்வா போன்ற சுதந்திர போராளிகளை நீக்குவதை பொறுத்திருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

Or log in with...