நான்கு விளையாட்டுகளுக்கு நான்கு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு | தினகரன்

நான்கு விளையாட்டுகளுக்கு நான்கு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

புத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் நான்கு விளையாட்டுக்களை மேம்படுத்தும் நோக்கில் ஒரு விளையாட்டுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் நான்கு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உடற்கல்வி தொடர்பான கல்வி அமைச்சின் வளவாளரும், புத்தளம் கல்வி பணிமனைக்கான கால்பந்தாட்ட இணைப்பாளருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் தெரிவித்தார்.

யாவருக்கும் விளையாட்டு எனும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் ஆகிய விளையாட்டு போட்டிகளுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளின் 16 வயதுக்குட்பட்ட 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளை உள்ளடக்கிய பயிற்சி அணியினை உருவாக்கும் தோரணையிலேயே இத்திட்டம் வகுப்பட்டுள்ளது.

பயிற்சி அணிக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு கிழமைக்கு இரு நாள் வீதம் இரு மாதங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான முதல் கட்ட கூட்டம், புத்தளம் கல்வி பணிமனையின் உடற்கல்வி பணிப்பாளர் குசலானி தலைமையில் புத்தளம் சென் அன்ரூஸ் மத்திய கல்லூரியில் திங்கட்கிழமை (13) நடைபெற்றது. ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் வளவாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

புத்தளம் தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...