ஈடன் கார்டன் ஆடுகளத்தை பார்வையிட்ட இலங்கை அணியினர் | தினகரன்

ஈடன் கார்டன் ஆடுகளத்தை பார்வையிட்ட இலங்கை அணியினர்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் முதல் டெஸ்டிற்கான ஈடன் கார்டன் மைதானத்தை இலங்கை அணி பார்வையிட்டுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற வியாழக்கிழமை (நாளை 16-ம் திகதி) தொடங்குகிறது. இதற்கான ஏற்கனவே இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இந்திய தலைவர் 11 பேர் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

அதன்பின் இலங்கை அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை வந்தடைந்தது. அந்த அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால், தலைமை பயிற்சியாளர் நிக் போதாஸ், துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர, பந்து வீச்சு ஆலோசகர் ருமேஷ் ரத்னயாகே, அணி முகாமையாளர் அசாங்க குருசிங்க ஆகியோர் ஈடன் கார்டன் ஆடுகளத்தை பார்வையிட்டனர்.

ஆடுகளத்தின் ஒருபகுதியை உன்னிப்பாக கவனித்த இந்த குழு, ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் நீண்ட நேரம் வார்த்தைகளை பரிமாற்றிக் கொண்டனர். 


Add new comment

Or log in with...