சயிட் அஜ்மல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு | தினகரன்

சயிட் அஜ்மல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சயிட் அஜ்மல் சர்வதேசகிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள உள்ளூர் ரி-ருவன்ரி போட்டியில் கலந்து கொண்டதன் பின்னர் தனதுஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக கடந்த 2008ஆம் ஆண்டு முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில்,இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் சயிட் அஜ்மல்களமிறங்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ரி-ருவன்ரி போட்டியின்போது, அவரது பந்துவீச்சு குறித்து சர்ச்சை எழுப்பட்டதையடுத்து, அவர் அணியில் இருந்து

விலக வேண்டி நிலை ஏற்பட்டிருந்தது.சயிட் அஜ்மல், 35 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கட்டுக்களையும், 113 ஒருநாள்

போட்டிகளில் 184 விக்கட்டுக்களையும், 64 ரி-ருவன்ரி போட்டிகளில் 85 விக்கட்டுக்களையும்கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...