கொழும்பு துறைமுகத்தில் ஆஸி. கடற்படை கப்பல் | தினகரன்

கொழும்பு துறைமுகத்தில் ஆஸி. கடற்படை கப்பல்

 

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் நிவுகாசல் நேற்று (14) இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது.

இக் கப்பலை கடற்படையினர் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

184 பேர் பணியாற்றும் இக் கப்பல் 138.1 மீற்றர் நீளமும் 14.3 மீற்றர் அகலமும் 4,200 தொன் கொள்ளளவுமுடையது.

04 நாட்கள் தரித்திருக்கும் இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். 

 


Add new comment

Or log in with...