Thursday, March 28, 2024
Home » உயரமான பாலமுருகன் சிலைக்கு குடமுழுக்கு விழா

உயரமான பாலமுருகன் சிலைக்கு குடமுழுக்கு விழா

by Prashahini
October 30, 2023 12:32 pm 0 comment

தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள நாற்பதுவட்டைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட கிழக்கிலங்கையில் மிகவும் உயரமான பாலமுருகன் சிலைக்கு நேற்று (29) சுபமுகூர்த்த வேளையில் 10.00 மணியளவில் திருக்குட முழுக்கு விழா இடம்பெற்றது.

கிழக்கிலங்கையின் பிரிசித்திபெற்ற தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் சிறப்பிடம் பெறும் தாந்தாமலை முருகன் ஆலயத்தை பிரதிபலிக்கும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கிலங்கையின் உயரமான பால முருகன் சிலை திருக்குடமுழுக்கு பெருவிழா இடம்பெற்றது.

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சுதானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்ற திருக்குடமுழுக்கு பெருவிளாவில் சிவ ஸ்ரீ சாம்பசிவம் சிவாச்சாரியார் உள்ளிட்ட பெருமளவான பக்த அடியார்கள், சிலை நிர்மான குழுவினர் மற்றும் ஆலம் அறங்காவலர் சபையினர் என அதிகளவானோர் கலந்துகொண்டு திருக்குடமுழுக்கு பெருவிழாவினை சிறப்பித்திருந்தனர்.

இதன்போது ஆலய நிர்மாண பணிக்காக கிடைக்கப்பெற்ற நிதியில் இருந்து வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் சிலருக்கு கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT