ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் ரூ. 74 கோடி டொலர்கள் | தினகரன்

ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் ரூ. 74 கோடி டொலர்கள்

 

ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் 74 கோடி டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சில திட்டங்களுக்கு மதிப்பிட்ட தொகையை விட 3 மடங்கு வரை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அரச நிறுவனங்கள்,மாகாண சபைகள்,உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயலாற்றுகை என்பவற்றை மதிப்பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுன்ற குழு அறையில் நடைபெற்றது. இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர்,கடந்த காலத்தில் பாராளுமன்றம் ,கணக்காய்வை மறந்தே செயற்பட்டது. எமது அரசாங்கம் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கடந்த ஒன்றரை தசாப்தத்தில் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் குறைந்திருந்தது.திறைசேரியினதும் மத்திய வங்கியினதும் அதிகாரம் கூடியிருந்தது.

2013 ஆம் ஆண்டு அரச வருமானத்தை கொண்டு கடனை செலுத்த முடியாத நிலை உருவானது.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த ஆட்சியில் சில திட்டங்களுக்கு ஒதுக்கிய செலவை விட 3 மடங்கு வரை பெறுமதியான தொகை சொலுத்த நேரிட்டது. ஶ்ரீலங்கன் விமான சேவைக்காக கடன் மற்றும் விமானங்கள் பெறப்பட்டாலும் கடனை செலுத்த முடியவில்லை.

இது நஷ்டத்தில் செயற்படுகிறது. இறுதியாக ஶ்ரீலங்கன் கடன் 74 கோடி டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.மொத்தமாக 3 இலட்சம் கோடி டொலர் கடன் செலுத்த வேண்டியிருக்கும்.

2020 ஆம் ஆண்டாகையில் கடன் சுமை குறைவடையும் என எதிர்பார்க்கிறோம். இந்த கடன் சுமையை அடுத்த பரம்பரை வரை கொண்டு செல்ல தேவை ஏற்படாது என்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்  


Add new comment

Or log in with...