சம்மாந்துறை நகரசபையாவதில் ஆட்சேபணை இல்லை; மல்வத்தை பி.ச. வேண்டும் | தினகரன்

சம்மாந்துறை நகரசபையாவதில் ஆட்சேபணை இல்லை; மல்வத்தை பி.ச. வேண்டும்

 

மல்வத்தை பிரதேச சமுக அபிவிருத்தி அமைப்பு கோரிக்கை

1968 ஆம் ஆண்டுகாலம் முதல் 1987 ஆம் ஆண்டுகாலம் வரை இயங்கி வந்தமல்வத்தை கிராம சபையை மீள மல்வத்தை பிரதேசசபையாக அமைக்கக் கோரிக்கை விடப்படுள்ளது.

மல்வத்தை பிரதேச சமுக அபிவிருத்தி அமைப்புகளின் ஒன்றியம் இதற்கான மனுவை, புதிய பிரதேசசபை ஸ்தாபிக்கும் சபையின் தலைவரும் அம்பாறை அரச அதிபருமான துசித பி வணிக சிங்கவிடம் நேற்றுமுன்தினம் கையளித்தது.

அமைப்பின் தலைவர் பி. நடராஜா செயலாளர் வி. ஜெயச்சந்திரன்  உபதலைவர் காந்தன் உள்ளிட்டோர் அதனைக் கையளித்தனர்.

இது தொடர்பில் காந்தன் கருத்துரைக்கையில்:

1968 முதல் 1987 வரை தனியான இயங்கி வந்த பழம்பெரும் மல்வத்தை கிராமசபை 1987 முதல் அரசின் சட்டப்படி சம்மாந்துறை பிரதேசசபைக்குள் உள்ளீர்க்கப்பட்டது.

அதாவது  தற்சமயம் மல்வத்தைப் பிராந்தியம் சம்மாந்துறை பிரதேசசபைக்குள் இருக்கிறது. எனினும் தற்போது சம்மாந்துறை பிரதேசசபையை நகர சபையாக்கும் முயற்சி நடைபெற்றுவருவதனால் புதிய பிரதேசசபையொன்று அமையும்.

அதனை மல்வத்தையை மையாமாகக் கொண்ட மல்வத்தை பிரதேச சபை அமைய வேண்டுமென்பதே எமது அன்பான வேண்டுகோளாகும்.

சம்மாந்துறையை நகரசபையாக்குவதில் எமக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. அதற்கு எமது பரிபூரண ஆதரவை வழங்குகின்றோம்.
அதே வேளை புதிய மல்வத்தை பிரதேசசபையானது எமது அறிக்கையிலுள்ளவாறு மூவினமக்களும் வரக்கூடியவாறு அமையவேண்டும்.

நாம் இல்லாத ஒன்றைக் கேட்கவில்லை. ஏலவே இருந்த பழம்பெரும் சபையையே கேட்கின்றோம். உண்மையில் அந்தக் காலத்தில், அதாவது 1968 முதல் 1987 வரை மல்வத்தை கிராமசபை இயங்கிவந்தது.

அந்த பழம்பெரும் சபையை மீண்டும் இந்தச்சந்தர்ப்பத்தில் உருவாக்கித் தரவேண்டும் என்பதே எமது அவா என்றார்.

(காரைதீவு குறூப் நிருபர் - சகா)

 


Add new comment

Or log in with...