அடுத்த ஆண்டு தொடக்கம் வத்திக்கானில் சிகரெட் தடை | தினகரன்

அடுத்த ஆண்டு தொடக்கம் வத்திக்கானில் சிகரெட் தடை

 

சுகாதார காரணங்களுக்காக வத்திக்கானில் அடுத்த ஆண்டில் சிகரெட் விற்பனையை தடை செய்ய பாப்பரசர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

“மக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் பழக்கம் ஒன்றுக்கு புனித பிரதேசத்தில் அனுமதி அளிக்க முடியாது என்பதுவே இதன் தெளிவான நோக்கமாகும்” என்று வத்திக்கான் பேச்சாளர் கிரேக் புர்கே அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக கூறும் உலக சுகாதார அமைப்பின் தரவு ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வத்திக்கானில் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றோருக்கு மலிவு விலையில் சிகரெட் விற்கப்படுகிறது.

மாதத்திற்கு ஐந்து சிகரெட் பெட்டிகள் வாங்க வத்திக்கான் ஊழியர்களுக்கு அனுமதி உள்ளது. இதனால் வத்திக்கானில் பணியாற்றும் புகைப்பிடிக்காத தனது நண்பர்கள் ஊடே மலிவு விலையில் சிகரெட் கொள்வனவு செய்வதை பெரும்பாலான இத்தாலியர்கள் பழக்கமாக கொண்டுள்ளனர். ரோம் நகரைச் சூழ சிறு மதில்களால் பிரிக்கப்பட்ட வத்திக்கான் புகைப்பிடிப்பதை தடை செய்யும் உலகின் சில நாடுகளில் ஒன்றாக இடம்பெறவுள்ளது. புூட்டான் 2005 ஆம் ஆண்டு சிகரெட் விற்பனைக்கு தடை விதித்தது. 


Add new comment

Or log in with...