கொங்கோ நாட்டில் ரயில் தடம்புரண்டு 33 பேர் பலி | தினகரன்

கொங்கோ நாட்டில் ரயில் தடம்புரண்டு 33 பேர் பலி

கொங்கோ ஜனநாயக குடியரசில் எண்ணெய் டாங்கர்களை ஏற்றிச் சென்ற ரயிலொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் தெற்கில் உள்ள பயுப்வே நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லுபுடி ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தடம் புரண்டிருக்கும் ரயில் பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியுள்ளது. பயணிகள் செல்ல முடியாத இந்த ரயிலில் இருந்து பலியானவர்கள் சட்டவிரோத பயணிகளாக இருக்க முடியும் என்று கொங்கோ தேசிய ரயில் போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரயில் தலைநகர் கின்ஷாசாவில் இருந்து இரண்டாவது மிகப்பெரிய நகரான லுபும்பாசிக்கு பயணிப்பதாகும். விபத்து இடம்பெற்ற கடன்கா மாகாணத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்டதில் 74 பேர் கொல்லப்பட்டு 163 பேர் காயமடைந்ததாக உத்தியோகபூர்வ அறிவிப்பு கூறியபோதும் இந்த சம்பவத்தில் 200 சடலங் வரை புதைக்கப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியது. 


Add new comment

Or log in with...