பத்திரிகை வாசிப்பதை வீரர்கள் தவிர்க்கவும் வோர்னர் வலியுறுத்தல் | தினகரன்

பத்திரிகை வாசிப்பதை வீரர்கள் தவிர்க்கவும் வோர்னர் வலியுறுத்தல்

பத்திரிகை வாசிப்பதை தவிர்த்து, ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் ஓட்டங்களைகுவிப்பதில் கவனம் செலுத்துமாறு, அவுஸ்திரேலிய அணியின் துணைத் தலைவர் டேவிட் வோர்னர், ஆஷஸ் தொடரின் ஆரம்ப இணைத் துடுப்பாட்ட வீரர் மட் ரென்ஷோவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரென்ஷோவின் ஆட்டம் தொடர்பில் ஊடகங்கள் விமர்சித்து வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த வோர்னர், ”ஊடகங்களின் விமர்சனங்களால் ரென்ஷோ பல அழுத்தங்களை எதிர்நோக்கி வருகிறார். எனவே, இவ்வாறான அழுத்தங்களுக்கு உள்ளாகாது, இந்த வாரம் சிறப்பாக விளையாடிஅதிக ஓட்டங்களை குவிப்பதில் ரென்ஷோ கவனம் செலுத்த வேண்டும்.அவரது இணைப்பாட்ட வீரர் என்ற வகையில், ரென்ஷா தனது திறமையை வெளிப்படுத்த நான்தூண்டுதலாக திகழ வேண்டியதுடன், அவர் வெற்றியடைய வேண்டும் என்றும் விரும்புகிறேன்” என்றார். 


Add new comment

Or log in with...