சானியா மிர்சா முழங்கால் காயத்தால் அவதி | தினகரன்

சானியா மிர்சா முழங்கால் காயத்தால் அவதி

 

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக இரட்டையர் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாததால் அவர் தர வரிசையில் சமீபத்தில் 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் மும்பையில் நடந்த விளையாட்டு விருது விழாவில் கலந்து கொண்ட சானியா மிர்சா அளித்த பேட்டியில், ‘இந்த வருடம் எனக்கு கடினமானதாக அமைந்தது.

முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். இதனால் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காயத்துக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமா?, வேண்டாமா? என்பது சில நாட்களில் தெரியும். தர வரிசையில் முதல்-10 அருகில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்று தெரிவித்தார். 

 


Add new comment

Or log in with...