அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் முதுகெலும்புள்ள அதிகாரிகள் உருவாக வேண்டும் | தினகரன்

அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் முதுகெலும்புள்ள அதிகாரிகள் உருவாக வேண்டும்

அரச நிறுவனங்களின் நிதிக் கட்டுப்பாடு மற்றும் செயலாற்றுகையை மதிப்பீடு செய்து விருது வழங்கும் விசேட நிகழ்வு நேற்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரி ஒருவருக்கு விருது வழங்குவதைப் படத்தில் காணலாம். (படம்: சுதத் சில்வா)

அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் முதுகெலும்புள்ளவர்களாக அரச அதிகாரிகள் செயற்படும் நிலை உருவாக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த காலத்தில் அரச அதிகாரிகளின் முழுகெலும்பு உடைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அவர்,சிறப்பாக செயற்படும் நிறுவனங்களுக்கு விருது வழங்குவது போன்று மோசமாக செயற்படும் நிறுவனங்களுக்கும் வழங்கி அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அரச நிறுவனங்கள், மாகாண சபைகள்,உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயலா ற்றுகை என்பவற்றை மதிப்பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுன்ற குழு அறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.இதன் ​போது தங்க விருது வழங்கப்பட்ட அரச நிறுவனங்களிடையே கணக்காய்வு திணைக்களத்திற்கு முதலிடமும் பிரதமர் அலுவலம், தேர்தல் திணைக்களம் என்பவற்றுக்கு முறையே இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடைத்தன. தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர்களாக இருந்தவர்களுக்கு தமது பதவியை விட்டுச் செல்ல நேரிட்டிருக்கிறது.

 பதவி இழந்தவர்களும் உள்ளனர். சுமார் 14 இலட்சம் அரச ஊழியர்கள் நாட்டிலுள்ளதோடு இது 13 பேருக்கு ஒருவராகவுள்ளது.கஷ்ட பகுதிகளில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் சிறந்த சேவையாற்றி வந்துள்ளனர். இவர்கள் பிரதேச அரசியல்வாதிகளுக்கு நல்லது கெட்டதை எடுத்துக் கூற அரச அதிகாரிகள் அஞ்சவில்லை.இவர்களின் முதுகெலும்பை அரசியல்வாதிகள் உடைத்தார்கள்.

கணக்காய்வு அதிகாரி ஒருவருக்கு கண்டியில் வைத்து எசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மீண்டும் முதுகெலும்புடன் பணிபுரியும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இன்றும் முதுகெலும்புடன் செயற்படும் சில அதிகாரிகள் இருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றன. அரச சேவையை சிறப்பானதாக மாற்ற வேண்டும்.2015 மாற்றத்தினூடாக இதற்கான அடித்தளம் இடப்பட்டது. 25-30 வருடங்கள் நீடித்த இந்த நிலைமையை ஒரேயடியாக மாற்ற முடியாது. பொலன்நறுவையில் பாடசாலை ஒன்றுக்கு 3 மாடிக் கட்டிடம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டாலும் இரு மாடிகளே கட்டப்பட்டுள்ளன.

ஆனால் ஒப்பந்தக்காரருக்கு முழுமையான நிதி வழங்கப்பட்டுள்ளது.இது பற்றி 2,3 மாதங்களாக ஆராய்ந்துவந்தாலும் இன்னும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. சிறப்பாக செயற்படும் அரச நிறுவனங்களை போன்றே, மோசடி,ஊழல் என்பவற்றில் புகழ்பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிலைமையை மாற்ற வேண்டும். தங்களுக்கு நிதி மோசடி பிரிவுக்கு செல்ல நேரிடுவது குறித்து அரசியல்வாதிளும் அரச அதிகாரிகளும் குறை கூறி வருகின்றனர். நாம் கடந்தகால தவறுகளை மாற்றி வருகிறோம்.

சகல அரச அதிகாரிகளும் முன்மாதிரியாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். சிறப்பாக செயற்பட்ட அரச நிறுவனங்களுக்கு இன்று தங்க, வெள்ளி விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டன.இதே போன்று இந்த பட்டியலில் இறுதியில் உள்ள மோசமாக செயற்பட்ட நிறுவனங்களையும் அழைத்து இவ்வாறு தங்க, வெ ள்ளி விருதுகள் வழங்க வேண்டும். அவற்றின் குறைபாடுகளை திருத்தி இதே போன்று சிறந்த நிலைமைக்கு மாற்ற வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...