சேது சமுத்திர திட்ட வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் | தினகரன்

சேது சமுத்திர திட்ட வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6 வாரகாலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இராமர் பாலத்தை இடிக்காமல் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்ககோரி பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் இராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் அதில் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (13.11.17) விசாரணைக்கு வந்தது.

அப்போது இராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக ஆறு வாரகாலங்களுக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


Add new comment

Or log in with...