30 வருட யுத்தம்; இரு தரப்புக்கும் 62 ஆயிரம் பில். நஷ்டம் | தினகரன்

30 வருட யுத்தம்; இரு தரப்புக்கும் 62 ஆயிரம் பில். நஷ்டம்

 

முப்பது வருட யுத்தம் காரணமாக 62 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு 31 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கும் அதேநேரம், புலிகளுக்கும் அதற்கு சமமானளவு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தத் தகவலை வழங்கினார். சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை வழங்காமையாலேயே பாரிய தொகையான நஷ்டத்தை நாடு எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில் காலஞ்சென்றாவது அரசியலமைப்பு சபையின் ஊடாக, சகல கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...